/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குழந்தைகள் பாதுகாப்பு ஒருநாள் கருத்தரங்கம்
/
குழந்தைகள் பாதுகாப்பு ஒருநாள் கருத்தரங்கம்
ADDED : நவ 09, 2025 05:51 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் குழந்தை உரிமைகள், பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் குறித்த ஒருநாள்கருத்தரங்கம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடந்தது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் வரவேற்றார்.
கலெக்டர் பேசுகையில், உடல்ரீதியான தண்டனை தவிர்த்து குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள் மற்ற ஆசிரியர்களிடம் கருத்தரங்கில் கற்றதை தெரிவிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய ஆலோசகர்கள் சுவார்னிமா பாண்டே, அனுபா ஜெயின், தேசிய சட்ட பல்கலை முன்னாள் ஒருங்கிணைப்பாளர் கண்ணாயிரம் உள்ளிட்ட நிபுணர்கள் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான தண்டனை, இளைஞர் நீதி சட்டம், போக்சோ சட்டம் குறித்து விளக்கினர்.
மனநல டாக்டர் அஷரப் அலி குழந்தைகளின் மன ஆரோக்கியம் குறித்து விளக்கினார். நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், சமூகநல ஆலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

