ADDED : நவ 13, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி அருகே இடையங்குளத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் 35. ஆடுகள் வளர்க்கிறார். ஆடுகளுக்கு இரைக்காக வயல் அருகே உள்ள வேப்ப மரத்தில் ஏறி கிளைகள் வெட்டினார்.
அப்போது மரத்தின் அருகே சென்ற உயரழுத்த மின்கம்பி மீது அரிவாள் பட்டதால் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கமுதி போலீசார் விசாரிக்கின்றனர்.