ADDED : டிச 10, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே கோவனி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி 50. நேற்று முன்தினம் அதிகாலை வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு சென்றார்.
திருச்சி --ராமேஸ்வரம் ரோட்டில் நடந்து சென்ற போது பின்னால் வந்த டூவீலர் மோதியது.
படுகாயமடைந்த ஆரோக்கியசாமி தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இறந்தார்.
டுவீலர் ஓட்டிச் சென்ற கருமொழி கிராமத்தை முருகேசனை திருவாடானை போலீசார் தேடி வருகின்றனர்.

