/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊதிய உயர்வு கோரி மறியல் 491 உள்ளாட்சி பணியாளர் கைது
/
ஊதிய உயர்வு கோரி மறியல் 491 உள்ளாட்சி பணியாளர் கைது
ஊதிய உயர்வு கோரி மறியல் 491 உள்ளாட்சி பணியாளர் கைது
ஊதிய உயர்வு கோரி மறியல் 491 உள்ளாட்சி பணியாளர் கைது
ADDED : டிச 09, 2025 05:59 AM

ராமநாதபுரம்: ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திய உள்ளாட்சி பணியாளர்கள் 491 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் யூனியன் அலுவலகம் முன்பு வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்தானம் தலைமையில் 250 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் கூறியதாவது:
ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மோட்டார் இயக்குபவர்களுக்கு ரூ.14,495, துப்புரவு பணியாளர்கள், காவலர்களுக்கு 12,395 வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் 2017ல் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் தற்போது வரை இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை. சர்வீஸ் தொகை, ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை. 2020க்கு பின் புதிய நியமனம் செய்யக்கூடாது என்ற தடையாணையை ரத்து செய்ய வேண்டும்.
நீர்த்தேக்கத்தொட்டி சுத்தம் செய்வதற்கு கிளீனி ங் அலவனஸ் ரூ.300 வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் பணிபுரிந்ததற்கான மூன்று மாத ஊதியத்தை வழங் க வேண்டும். ஊராட்சி நிதியிலிருந்து மாத ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றார். தொடர்ந்து ரோட்டில் மறியல் போராட்டம் நடத்திய நிலையில் 191 பேரை போலீசார் கைது செய்தனர்.
* முதுகுளத்துாரில் மறியல் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சிவாஜி தலைமை வகித்தார்.
மாவட்ட துணைச் செயலாளர் பச்சம்மால், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பிரான்சிஸ், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், தாலுகா செயலாளர் இந்திரா முன்னிலை வகித்தனர்.
விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன், அறிவியல் இயக்கம் மாவட்ட தலைவர் நவநீதகிருஷ்ணன் உட்பட முதுகுளத்துார், கடலாடி, கமுதி ஒன்றியங்களில் இருந்து நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

