/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி நீதிமன்றத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
/
பரமக்குடி நீதிமன்றத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
பரமக்குடி நீதிமன்றத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
பரமக்குடி நீதிமன்றத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 09, 2025 05:59 AM
பரமக்குடி: பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமக்குடி வக்கீல்கள் சங்க தலைவர் பூமிநாதன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பசுமலை உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். செயலாளர் யுவராஜா வரவேற்றார். தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இ--பைலிங் முறையை ரத்து செய்ய வேண்டும். வக்கீல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தினர்.
மேலும் இன்று (டிச., 9) மாவட்ட நீதிமன்றம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடக்க உள்ளதாகவும், தொடர்ந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.