/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இடையூறு ஏற்படுத்திய 34 கால்நடைகள் பிடிப்பு
/
இடையூறு ஏற்படுத்திய 34 கால்நடைகள் பிடிப்பு
ADDED : டிச 09, 2025 05:58 AM
கீழக்கரை: கீழக்கரை நகர் பகுதியில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக பிரதான சாலைகளில் சுற்றித்திரிந்த 34 பசுக்கள் மற்றும் காளை மாடுகளை பிடித்து நகராட்சி அலுவலகம் முன்புறமுள்ள காலி இடத்தில் அடைத்தனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா கூறியதாவது:
பிடிக்கப்பட்ட கால்நடைகளை 48 மணி நேரத்திற்குள் அதன் உரிமையாளர்கள் கால்நடை ஒன்றுக்கு ரூ.5000 வீதம் செலுத்தி மீட்டுக் கொள்ள வேண்டும். அவ்வாறு மீட்கப்படாத பட்சத்தில் பகிரங்க பொது ஏலம் விடப்படும்.
மீண்டும் மீண்டும் இது போல தொடர்ந்து கால்நடைகளை பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் விடுவோர் மீது போலீசார் மூலம் குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும் எனவும் தெரிவித்தார்.

