/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் 5000 வாக்காளர் படிவங்கள் முறைகேடாக இணைக்கப்பட்டதாக புகார்
/
பரமக்குடியில் 5000 வாக்காளர் படிவங்கள் முறைகேடாக இணைக்கப்பட்டதாக புகார்
பரமக்குடியில் 5000 வாக்காளர் படிவங்கள் முறைகேடாக இணைக்கப்பட்டதாக புகார்
பரமக்குடியில் 5000 வாக்காளர் படிவங்கள் முறைகேடாக இணைக்கப்பட்டதாக புகார்
ADDED : டிச 09, 2025 05:58 AM

அ.தி.மு.க., வினர் நகராட்சி முன் ஆர்ப்பாட்டம்
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி பகுதியில் 5000 வாக்காளர் படிவங்கள் வரை முறைகேடாக இணைக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க., வினர் ஆதாரத்துடன் புகார் தெரிவித்து நகராட்சி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்.ஐ.ஆர்., திருத்த பணியில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக அ.தி.மு.க., நகர் செயலாளர் வின்சென்ட்ராஜா தலைமையில் நகராட்சி கமிஷனரை சந்தித்து மனு அளிக்க வந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் டாக்டர் முத்தையா, சதன்பிரபாகர் உள்ளிட்ட நுாறுக்கும் மேற்பட்ட கட்சியினர் திரண்டு கமிஷனரை முற்றுகையிட்டனர்.
அப்போது பி.எல்.ஓ.,க்கள் வீடு வீ டாக சென்று வாக்காளர் படிவங்கள் கொடுத்த நிலையில், ஒவ்வொரு பகுதிகளும் 100 முதல் 300 வரை படிவங்கள் மீதம் இருந்தன. நவ., 28ல் துவங்கி அனைத்து படிவங்களையும் ஸ்கேன் செய்து ஏற்றி உள்ளனர். இதன்படி இரட்டை வாக்குரிமை, இறந்தவர்கள் மற்றும் அடையாளம் காணப்படாத பி.எல்.ஓ., கையெழுத்திடாத படிவங்கள் என 5000 படிவங்கள் வரை தன்னிச்சையாக ஏற்றப்பட்டுள்ளது என்றனர்.
இதுகுறித்து கமிஷனர் தாமரை முறையாக பதிலளிக்காததால் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆர்.டி.ஓ., சரவணபெருமாள் அ.தி.மு.க., வினருடன் பேசினார். அப்போது இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களுடன் முறையாக இணைக்கப்படாத படிவங்கள் மற்றும் கணினி தகவல் ஆதாரத்தை ஒப்படைத்தனர்.
இதன்படி முறையாக இணைக்கப்படாத வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆர்.டி.ஓ., தெரிவித்ததன் பேரில் கலைந்து சென்றனர். இதனால் 2:00 மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

