ADDED : அக் 09, 2025 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சத்திரக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கு இடைப்பட்ட 7 கி.மீ., தொலைவில் நேற்று காலை 7:30 மணிக்கு பெயர் விலாசம் தெரியாத 55 வயது ஆண் ரயில்வே தண்டவாளத்தை கடந்துள்ளார்.
அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை செல்லும் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்தில் பலியானார். எட்டிவயல் வி.ஏ.ஓ., முகமது ஆசிக் புகாரில் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.