ADDED : அக் 09, 2025 11:15 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை-அறிவியல் கல்லுாரியில் நிறுவனர் டாக்டர் அப்துல்லா பிறந்த நாள் விழா நடந்தது.தாளாளர் செல்லத்துரை அப்துல்லா துவக்கி வைத்தார். முதல்வர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். கல்லுாரி மாணவர்களுக்கு வினாடிப் போட்டி உட்பட 22 வகையான போட்டிகள் நடந்தது. இதில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர், நாடக இயக்குநர் சண்முகராஜா பங்கேற்று மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை அறிந்து கொண்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம் என பேசினார். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. செய்யது அம்மாள் அறக்கட்டளை தலைவர் டாக்டர் பாபு அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா, அறக்கட்டளை டாக்டர் சானாஸ் பரூக் அப்துல்லா வாழ்த்தி பேசினர்.
ஏற்பாடுகளை கல்லுாரி கலைப் பண்பாட்டு அமைப்பின் பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபிபுல்லா ஆகியோர் செய்தனர்.