ADDED : ஜூன் 30, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: பரமக்குடி அருகே சத்திரக்குடியைச் சேர்ந்த கண்ணன் மகன் மகேஸ்வரன் 26. இவர் ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் இரவில், பணி முடிந்து பரமக்குடி ரோட்டில் டூ வீலரில் ஊருக்கு சென்றார். பரமக்குடி ரோடு இருவான் பச்சேரி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த டூ வீலர் ரோட்டோர எச்சரிக்கை பலகையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் படுகாயம் அடைந்த மகேஸ்வரன் (ஹெல்மெட் அணியவில்லை) சம்பவ இடத்தில் பலியானார். ஆர்.எஸ். மங்கலம் போலீசார் வழக்கு பதிந்தனர்.