ADDED : அக் 02, 2025 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : தொண்டி அருகே பாசிபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் 42. நேற்று முன்தினம் மாலையில் தாமோதரபட்டினத்திற்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு ஊருக்கு செல்ல பஸ்ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது தொண்டியிலிருந்து மீமிசல் நோக்கி சென்ற கார் மோதியதில் பாலமுருகன் அதே இடத்தில் பலியானார்.
எஸ்.பி.பட்டினம் போலீசார் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கலைக்கூட்டத்தை சேர்ந்த கார் டிரைவர் ஜலின் 47, என்பவரை தேடி வருகின்றனர்.