ADDED : பிப் 03, 2024 05:06 AM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் பகுதியில் மிளகாய் செடிகளுக்கு ஊடுபயிராக வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விவசாயம் செய்திருந்தனர். நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மிளகாய் விவசாயம் செய்து வருகின்றனர்.
முதுகுளத்துார் அருகே காக்கூர், புளியங்குடி, தேரிருவேலி உட்பட அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் மிளகாய் விவசாயம் செய்து வருகின்றனர்.
பருவமழையால் ஒரு சில கிராமங்களில் பயிர்கள் அழிந்து வீணாகி உள்ளது. தண்ணீரை வெளியேற்றி தற்போது மிளகாய்ச் செடி வளர்ப்பில் தீவிரம் காட்டினர். மிளகாய் செடிகளுக்கு ஊடுபயிராக வெங்காயம், மல்லி விவசாயம் செய்கின்றனர்.
மிளகாய் செடிக்கு ஏற்றவாறு தண்ணீர் குறைந்த அளவு போதுமானதால் விவசாயிகள் ஊடுபயிர் வளர்ப்பில் தீவிரம் காட்டுகின்றனர்.

