/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலம் அரசுப் பள்ளியில் திறந்தவெளியில் சமைக்கும் அவலம்
/
ஆர்.எஸ்.மங்கலம் அரசுப் பள்ளியில் திறந்தவெளியில் சமைக்கும் அவலம்
ஆர்.எஸ்.மங்கலம் அரசுப் பள்ளியில் திறந்தவெளியில் சமைக்கும் அவலம்
ஆர்.எஸ்.மங்கலம் அரசுப் பள்ளியில் திறந்தவெளியில் சமைக்கும் அவலம்
ADDED : மார் 31, 2025 06:11 AM

ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் மேற்கு தொடக்கப்பள்ளியில் சமையலறை கட்டடம் இல்லாததால் மாணவர்களுக்கு திறந்த வெளியில் சமையல் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம் அரசூரணி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (மேற்கு) அமைந்துள்ளது. பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு சத்துணவு கூடம் இல்லாததால் பள்ளியில் திறந்த நிலையில் மாணவர்களுக்கு சமையல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சமையல் கூடம் இல்லாதது குறித்தும், அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் சார்பில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை உள்ளது.
இது குறித்து வார்டு கவுன்சிலர் அனுராதா கூறுகையில், பள்ளிக்கு சமையல் கூடம் இல்லாதது குறித்து பேரூராட்சி கூட்டத்திலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளேன்.
புதிதாக சமையல் கூடம் அமைக்க வேண்டும் என்றார்.