/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொழிலாளர் அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் திறப்பு
/
தொழிலாளர் அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் திறப்பு
ADDED : பிப் 17, 2024 10:54 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொழிலாளர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட பிரிவில் சர்வர் பழுதால் விடுப்பட்ட விண்ணப்பங்களை மீண்டும் பதிவு செய்ய சிறப்பு உதவி மையம் செயல்படுகிறது.
மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தொடர்பான 18 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களின் விண்ணப்பங்கள், கேட்பு மனுக்கள் இணையதளம் வழியாக பெறப்படுகிறது. சர்வர் பழுதால் இழப்பு ஏற்பட்ட ஆணவங்கள் தற்போது மீண்டும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
எனவே 2023 டிச.2க்கு முன் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள தொழிலாளர்கள் உரிய ஆணவங்களுடன் மீண்டும் பதிவேற்றம் செய்யலாம். இதற்கு வசதியாக ராமநாதபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட பிரிவில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது என உதவி ஆணையர் குலசேகரன் தெரிவித்துள்ளார்.