/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்த வாய்ப்பு
/
அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்த வாய்ப்பு
ADDED : ஜூலை 03, 2025 10:26 PM
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வாங்கிய பொதுமக்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்து வரன்முறைப்படுத்தலாம்.
தனி மனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் www.onlineppa.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
இதன்படி அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் 2016அக்.,20 அல்லது அதற்குமுன் அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 2026 ஜூன் 30 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து வீட்டு வசதி மற்றும் நகரமைப்பு வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
இது போன்று மலையிடங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன் முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை www.tnhillarealayoutreg.in என்ற இணையதளத்திற்கு பதிலாக நவ., 30 வரை www.tcponline.tn.gov.in என்ற இணையதளத்தில்விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.