தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை செய்ய உத்தரவு

ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை செய்ய உத்தரவு

ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை செய்ய உத்தரவு


ADDED : மார் 07, 2024 10:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2024 10:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சி, கடலாடி ஒன்றியத்தில் 60 கிராம ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகளை துரிதப்படுத்த துறை அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான குடிநீர், சாலை வசதி, மின்சாரம் உள்ளிட்ட ஊராட்சி தொடர்புடைய பணிகளை துரிதமாக முடிக்குமாறு அறிவுறுத்தினர்.

தேர்தலுக்காக கிராமங்கள் தோறும் ஓட்டு சேகரிக்கும் போது குறைகளைக் கூறி எதிர்ப்புகளை வெளிக்காட்டுவதற்கு முன் மக்களை திருப்திப்படுத்தும் பணிகளை செய்கின்றனர்.

தற்போது கோடை காலம் துவங்கி உள்ளதால்கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கான முயற்சியை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் பெரும்பாலான ஊராட்சிகளில் ஆர்.ஓ., பிளான்டுகளை பயன்படுத்த முடியாத நிலையில் காட்சிப் பொருளாக உள்ளது.

இதுபோன்ற அத்தியாவசிய அடிப்படை வசதிகளை விரைவாக செய்து முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us