/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு ஓட்டம்
/
பரமக்குடியில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு ஓட்டம்
பரமக்குடியில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு ஓட்டம்
பரமக்குடியில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு ஓட்டம்
ADDED : ஆக 23, 2025 11:32 PM
பரமக்குடி:பரமக்குடியில் உடல் உறுப்பு தானத்தின் அவசியத்தை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் நடந்தது.
பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து தலைமை மருத்துவர் முத்தரசன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து ஓட்ட பாலம், ஐந்து முனை ரோடு, பஸ் ஸ்டாண்ட் வழியாக அரசு கலைக்கல்லுாரியை அடைந்தது. ஆண்களுக்கு 8 கி.மீ., மற்றும் பெண் களுக்கு 5 கி.மீ., என இரு பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முதல் மூன்று இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.5000, 3000, 2000 என பரிசளிக்கப் பட்டது.
மேலும் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டன.
நிறைவு விழாவில் ரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மெழுகுவர்த்தி நண்பர்கள் தலைவர் முத்துக்குமார் நன்றி கூறினார். பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மெழுகுவர்த்தி நண்பர்கள் பவுண்டேஷன் ஏற்பாடுகளை செய்தனர்.

