ADDED : செப் 09, 2025 03:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூர் ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா கொடியேற்றம் ஆக.,29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு தேர்பவனி நடந்தது. மிக்கேல் அதிதுாதர், செபஸ்தியார், சவேரியார், புனித அருளானந்தர், ஆரோக்கிய அன்னை தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது.
முன்னதாக நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவை முன்னிட்டு சர்ச் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.