ADDED : அக் 06, 2025 04:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஜெபமாலை அன்னை சர்ச் திருவிழா செப்.26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் மாலையில் பாவசங்கீர்த்தனமும், செபமாலையும், திருஉருவப் பவனியும், நவநாள் திருப்பலியும் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு திருப்பலி நடந்தது. அதைத் தொடர்ந்து அன்னையின் உருவம் தாங்கிய மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தேர்ப்பவனி நடந்தது.
நேற்று திருப்பலியும், நற்கருணைப் பவனியும் நடந்தது. நிகழ்ச்சிகளில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
நாளை (அக்.7ல்) மாலை 6:15 மணிக்கு செபமாலை அன்னை விழாத் திருப்பலியும், இறுதியாக அன்னையின் உருவப் பவனியும் நடைபெற உள்ளது.