/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
'சிடி' ஸ்கேன் எடுக்க வெளி நோயாளிகள் காத்திருப்பு: ஒரு மாதத்திற்கும் மேல் ஆவதால் அவதி
/
'சிடி' ஸ்கேன் எடுக்க வெளி நோயாளிகள் காத்திருப்பு: ஒரு மாதத்திற்கும் மேல் ஆவதால் அவதி
'சிடி' ஸ்கேன் எடுக்க வெளி நோயாளிகள் காத்திருப்பு: ஒரு மாதத்திற்கும் மேல் ஆவதால் அவதி
'சிடி' ஸ்கேன் எடுக்க வெளி நோயாளிகள் காத்திருப்பு: ஒரு மாதத்திற்கும் மேல் ஆவதால் அவதி
ADDED : மே 02, 2025 06:13 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் புற நோயாளிகள் ஸ்கேன் எடுப்பதற்காக ஒரு மாதத்திற்கும் மேல் காத்திருக்கும் நிலை உள்ளதால் அவதிப்படுகின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தினமும் 500க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மகப்பேறு, குழந்தைகள் நலம், அவசர சிகிச்சை, தீவிர சிகிச்சை, எலும்பு முறிவு, பல், கண், காது, மூக்கு, தொண்டை, இதய பிரிவு என பல்வேறு சிறப்பு பிரிவுகள் உள்ளன.
இங்கு சிகிச்சை பெறுவோருக்கு நோய் கண்டறிவதற்காக டாக்டர்கள் நோயாளிகளுக்கு சி.டி.., ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என பல்வேறு ஸ்கேன்கள் எடுக்க பரிந்துரை செய்கின்றனர். நாள் ஒன்றுக்கு 70 முதல் 80 பேருக்கு ஸ்கேன் எடுக்கப்படுகிறது. இதில் புற நோயாளிகளாக சிகிச்சைக்கு வருபவர்களுக்கு ஒரு மாதம் கழித்தே ஸ்கேன் எடுப்பதற்கு அனுமதி வழங்குகின்றனர்.
புற நோயாளிகள் நோய் பாதிப்பு இருந்தாலும் அவர்கள் ஸ்கேன் எடுப்பதற்காக ஒரு மாதத்திற்கும் மேல் காத்திருக்கும் நிலை உள்ளது. ஸ்கேன் பிரிவில் அனைத்து வசதிகள் இருந்தும் நோயாளிகளுக்கு தேவையற்ற கால தாமதம் ஏற்படுத்துகின்றனர்.
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஸ்கேன் பரிந்துரை செய்பவர்களுக்கு விரைவில் ஸ்கேன் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதனை பார்த்துதான் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் தாமதமின்றி ஸ்கேன் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.