தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ புறக்காவல் நிலையம் திறப்பு

 புறக்காவல் நிலையம் திறப்பு

 புறக்காவல் நிலையம் திறப்பு


ADDED : பிப் 06, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தரகோசமங்கை: - உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் 2025 ஏப்.,4ல் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து நாள் தோறும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு வருகின்றனர். பாதுகாப்பு கருதி கோயில் ராஜகோபுரம் அருகே புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

அதன் திறப்பு விழா நடந்தது. எஸ்.பி., சந்தீஷ் திறந்து வைத்தார். இந்த புறக்காவல் நிலையத்தில் 5 தடுப்புகள், 10 பொது ஒளிபரப்பு அமைப்புகள், 25 சிசிடிவி கேமராக்கள் இணைக்கப்பட்ட நவீன கட்டுப்பாட்டு அறை செயல்பட உள்ளது. பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு மேலும் உறுதி செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், கோயில் பணியாளர்கள், சிவனடியார்கள் கலந்து கொண்டனர். போலீசார் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us