/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவிபட்டினம் பகுதியில் 200 ஏக்கரில் நெற்பயிர் தொடர் மழையால் பாதிப்பு
/
தேவிபட்டினம் பகுதியில் 200 ஏக்கரில் நெற்பயிர் தொடர் மழையால் பாதிப்பு
தேவிபட்டினம் பகுதியில் 200 ஏக்கரில் நெற்பயிர் தொடர் மழையால் பாதிப்பு
தேவிபட்டினம் பகுதியில் 200 ஏக்கரில் நெற்பயிர் தொடர் மழையால் பாதிப்பு
ADDED : அக் 28, 2025 03:37 AM

தேவிபட்டினம்: மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் தேவிபட்டினம் பகுதியில் 200 ஏக்கரில் முளைத்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளது.
தேவிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான காந்திநகர், சக்கரவாள நல்லுார், கழனிக்குடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கடந்த மாதம் நெல் விதைப்பு செய்யப்பட்டது. அதன் பின் மழை இல்லாததால் நெற்பயிர்கள் முளைப்பதற்கு ஈரப்பதம் இன்றி இருந்து வந்தன. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மாவட்டத்தில் தொடர் மழை பெய்ததால் மழைக்கு நெற்பயிர்கள் முளைத்தன.
ஆனால் அதிகப்படியான மழையால் முளைத்த நெற்பயிர்கள் வெளியில் வர முடியாமல் தண்ணீரில் மூழ்கின. தண்ணீரை வெளியேற்றி பயிர்களை காப்பாற்றக்கூடிய மழை நீர் வடிகால் வசதி இல்லாததால் அப்பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன.
இதுகுறித்து காவிரி, வைகை, குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் கூறுகையில், தொடர் மழையால் தேவிபட்டினத்தை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்கள் முளைத்த நிலையில் தண்ணீரில் மூழ்கியுள்ளன. முறையான மழை நீர் வடிகால் வசதி இல்லாததால் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். நிர்வாகிகள் அப்துல் ரஹீம், கணபதி பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

