/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தாமதமின்றி நெல் கொள்முதல் நிலையங்கள்; குறைந்த விலைக்கு விற்கும் விவசாயிகள்

ADDED : ஜன 12, 2025 05:13 AM
மாவட்டத்தில், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டினம்,பரமக்குடி, முதுகுளத்துார் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் நெல் சாகுபடி நடக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் நெல் மகசூல்நிலையை எட்டி உள்ளன.
குறிப்பாக திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், நயினார் கோவில் தாலுகாக்களில் தற்போது நெல் அறுவடை பணிகள் துவங்கியுள்ளன. இயந்திரம் மூலம் அறுவடை பணியை மேற்கொண்டு வரும் விவசாயிகள் அறுவடை செய்த நெற்களை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததன் காரணமாக, தனியார் நெல் வியாபாரிகளிடம் அறுவடை நெற்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்தாண்டு அறுவடை காலத்தை ஒப்பிடுகையில், 60கிலோ எடை கொண்ட நெல் மூடைக்கு, ரூ.500 முதல் ரூ.800 வரை விலையை குறைத்து தனியார் வியாபாரிகள் லாப நோக்குடன்கொள்முதல் செய்து வருவதால், அறுவடை செய்த நெல் விவசாயிகள்கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.