ADDED : செப் 26, 2026 05:43 PM
அ நிறம் | அளவு
தேவிபட்டினம்: தேவிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான கோப்பேரிமடம், கழனிக்குடி, சம்பை, முத்துச்சாமிபுரம், நாரணமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கடந்த வாரம் பெய்த பருவமழையை பயன்படுத்தி விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனர். கடந்த சில வாரங்களாக விளை நிலங்களை உழவு செய்து நெல் விதைப்புக்கு ஏற்ற வகையில் விவசாயிகள் தயார்படுத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது விவசாயிகள் நெல் விதைப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், நெல் விதை, கூலி ஆட்களின் கூலி உள்ளிட்டவைகள் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
