/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரிய கண்மாய் பாசனப்பகுதியில் நெல் விதைப்பு பணிகள் தீவிரம்
/
பெரிய கண்மாய் பாசனப்பகுதியில் நெல் விதைப்பு பணிகள் தீவிரம்
பெரிய கண்மாய் பாசனப்பகுதியில் நெல் விதைப்பு பணிகள் தீவிரம்
பெரிய கண்மாய் பாசனப்பகுதியில் நெல் விதைப்பு பணிகள் தீவிரம்
ADDED : செப் 27, 2025 03:51 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசனப் பகுதியில் நெல் விதைப்பு பணியை விவசாயிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
தமிழகத்தின் இரண்டா வது பெரிய கண்மாயான ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் மூலம் 12 ஆயிரத்து 142 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பெரிய கண்மாயின் கீழுள்ள பாசன விளை நிலங்கள், கோடை உழவு செய்யப்பட்டும், நெல் விதைப்பு செய்வதற்கு ஏற்ற நிலையில் உழவு செய்யப்பட்டும் தயாராக உள்ளது.
இந்நிலையில், பாசன பகுதிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம், கீழக்கோட்டை, செட்டியமடை, பெருமாள்மடை, ராமநாதமடை, மேலமடை, புல்லமடை, வல்லமடை, ரெகுநாத மடை, இரட்டை யூரணி, சிலுகவயல் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் கடந்த சில நாட்களாக நெல் விதைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த மாத இறுதியில் நெல் விதைப்பு பணிகள் துவங்கிய நிலையில் பெரிய கண்மாய் பாசனத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது நெல் விதைப்பு பணிகள் துவங்கி விதைப்பு பணிகள் தீவிர மடைந்துள்ளது குறிப் பிடத்தக்கது.
ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் கடந்த மாதம் நெல் விதைப்பு பணியில் ஈடுபட்ட விவசாயிகள் நெல் முளைப்புக்கு ஏற்ற பருவமழை இல்லாததால் கவலையில் உள்ளனர்.