UPDATED : நவ 16, 2026 05:48 PM
ADDED : நவ 16, 2026 05:44 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே கழுகூரணி பகுதியைச் சேர்ந்த நமச்சிவாயம் மகன் செல்வேந்திர குமரன் 43. இவர் பெயின்டர் வேலை செய்கிறார்.
அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு பெயின்ட் அடிக்கும் வேலைக்கு சென்றார். அங்கு வசித்த 15 வயது சிறுமியிடம் தவறாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த சைல்டு லைன் அமைப்பினர் சிறுமியிடம் விசாரித்தனர். அவர் அளித்த புகாரில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து செல்வேந்திர குமரனை தேடி வருகின்றனர்.
