/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி - கமுதக்குடி ரோட்டை அலங்கரிக்கும் பனை மரங்கள்: பாதுகாக்க கோரிக்கை

ADDED : ஜன 14, 2025 08:07 PM

பரமக்குடி:
பரமக்குடி, கமுதக்குடி கிராம ரோட்டில் இருபுறமும் பனை மரங்கள் வளர்ந்து அந்த வழியே செல்வோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் வறட்சியை தாங்கி வளரக்கூடியதாக பனை மரங்கள் உள்ளன. உலகில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. பனைகளின் ஒட்டுமொத்த பயன்பாடும் வாழை மரம் போல் உள்ளன. பதநீர், பனங்கற்கண்டு, கருப்பட்டி, நுங்கு, வெல்லம், பனங்கிழங்கு மற்றும் ஓலைகள் கூரை வேயவும், வீட்டு சட்டங்கள் தயாரிக்கவும் மரம் பயன்படுகிறது.
இவை பல கோடி எண்ணிக்கையில் பராமரிக்கப்பட்ட நிலையில் தற்போது சில லட்சங்கள் மட்டுமே உள்ளதாக கணக்கீடு தெரிவிக்கிறது. இதனால் சீசனில் கிடைக்கக்கூடிய மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பரமக்குடியில் இருந்து பொதுவக்குடி விலக்கு ரோடு கமுதக்குடி செல்லும் வழியில் ஏராளமான பனை மரங்கள் அப்பகுதி மக்களை வரவேற்றபடி வளர்ந்துள்ளன. தற்போதைய சூழலில் விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் ஆற்றங்கரை மற்றும் கால்வாய், கண்மாய் ஓரங்களில் பனை விதைகள் நடப்பட்டு வருகிறது.
ஆகவே பனையின் அவசியம் கருதி வருங்கால சந்ததிகளுக்கு பாரம்பரிய தேவைகளை விட்டுச் செல்லும் வகையில், மரங்களை பராமரிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பங்கு அவசிவம் ஆகிறது.