ADDED : ஜன 03, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே பஞ்சந்தாங்கியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. மார்கழி மாதத்தை முன்னிட்டு மூலவர் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்து வருகிறது. நேற்று காலை மூலவர் முத்துமாரி அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், எலுமிச்சம் பழம் மாலை சாற்றப்பட்டது.
பெண்கள் நெய் விளக்கேற்றியும் பொங்கலிட்டும் வழிபாடு செய்தனர்.
ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.