/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழைக்கால பாதிப்புகளை தவிர்க்க ஊராட்சி அளவில் குழுக்கள் தேவை
/
மழைக்கால பாதிப்புகளை தவிர்க்க ஊராட்சி அளவில் குழுக்கள் தேவை
மழைக்கால பாதிப்புகளை தவிர்க்க ஊராட்சி அளவில் குழுக்கள் தேவை
மழைக்கால பாதிப்புகளை தவிர்க்க ஊராட்சி அளவில் குழுக்கள் தேவை
ADDED : அக் 23, 2025 03:57 AM
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட 33 கிராம ஊராட்சிகளிலும் மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் பேரிடர்களை சரி செய்வதற்கு யூனியன் அலுவலர்கள் தலைமையில் புதிய குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கீழக்கரை வருவாய்த் துறைனர் மற்றும் யூனியன் அலுவலர்கள் ஒன்றிணைந்து கடலோரப் பகுதிகளில் உள்ள கிராமங்கள் மற்றும் கண்மாய் நீர்நிலைப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் ஏற்படக்கூடிய இடர்பாடுகளை தவிர்க்கும் வகையில் கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும். ஜன., 6 முதல் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை முன்னிட்டு தனி அலுவலர்கள் மற்றும் பி.டி.ஓ.,க்கள், மண்டல துணை பி.டி.ஓ.,க்கள், ஊராட்சி செயலாளர்கள் மூலம் கிராம ஊராட்சிகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் வைக்கக்கூடிய அத்தியாவசிய பொதுமக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சிகளில் தேங்கியுள்ள குப்பை அகற்றுவதற்கும், கழிவு நீர் வழிந்தோடுவதற்கும், மின்சார பிரச்னை உள்ளிட்ட பிரச்சனைகளில் தீர்வு காண்பதற்கு முறையான அதிகாரிகள் குழுவை நியமிக்க வேண்டும்.
குறிப்பாக மழைக் காலங்களில் ஏற்படக்கூடிய சேத மதிப்பீட்டு கணக்கீட்டு விபரங்களின் மூலமாக முறையான பயனாளிகளுக்கு கிடைப்பதற்கும் வழி செய்ய வேண்டும் என்றனர்.