/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பொது இடங்களில் குப்பை கொட்டாதீர் ஊராட்சி ஒன்றிய அதிகாரி அறிவுரை
/
பொது இடங்களில் குப்பை கொட்டாதீர் ஊராட்சி ஒன்றிய அதிகாரி அறிவுரை
பொது இடங்களில் குப்பை கொட்டாதீர் ஊராட்சி ஒன்றிய அதிகாரி அறிவுரை
பொது இடங்களில் குப்பை கொட்டாதீர் ஊராட்சி ஒன்றிய அதிகாரி அறிவுரை
ADDED : அக் 21, 2025 03:21 AM
திருவாடானை: பொது இடங்களில் குப்பை கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சிகள் உள்ளன. பல லட்சம் மக்கள் வசிக்கும் இப்பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு பல கோடி ரூபாய்களை ஆண்டு தோறும் ஒதுக்கி வருகின்றன. மக்கும் குப்பை, மக்காத குப்பை என மக்களிடம் தரம் பிரித்து வாங்கி மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. துவக்கத்தில் நல்ல முறையில் செயல்பட்டு வந்த திட்டம் நாளடைவில் தத்தளித்து வருகிறது.
குப்பையை தரம் பிரித்து வீடுதேடி வரும் துாய்மைப் பணியாளர்களிடம் வழங்க உள்ளாட்சி நிர்வாகங்கள் பல்வேறு வகைகளில் பிரசாரம் செய்தும் பலன் கிடைப்பதில்லை. இதுகுறித்து திருவாடானை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஆரோக்கியமேரிசாராள் கூறியதாவது:
பொது இடங்களில் குப்பை கொட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அடிக்கடி விழிப்புணர்வு ஏற்படுத்தியும் சிலர் கண்டு கொள்வதில்லை. குப்பை நம் வீட்டில் இருந்து வெளியில் சென்றால் போதும். அதற்கு பிறகு என்ன ஆனால் நமக்கு என்ன என்ற மனநிலையில் தான் பெரும்பாலான மக்கள் உள்ளனர்.
உள்ளாட்சி நிர்வாகங்களின் துாய்மை பணியாளர்கள் வீடு தேடி வந்து குப்பை சேகரித்து சென்றாலும் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆள் நடமாட்டம் குறைவான பகுதிகளில் வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் குப்பை கொட்டி செல்வதும் நடக்கிறது.
குளம், குட்டை, ஆற்றங்கரை உள்ளிட்ட இடங்களில் குப்பை கொட்டி சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்துகின்றனர். இனிவரும் காலங்களில் வீடுதேடி வரும் குப்பை வண்டிகளில் குப்பையை கொட்டி துாய்மைப் பணியாளர்களுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.