/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சித்திரங்குடியில் பங்குனி களரி உற்ஸவ விழா
/
சித்திரங்குடியில் பங்குனி களரி உற்ஸவ விழா
ADDED : ஏப் 07, 2025 05:57 AM
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே சித்திரங்குடி கிராமத்தில் சீலைக்காரி அம்மன் கோயில் பங்குனி களரி உற்ஸவ விழா ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் சீலைக்காரி அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
பள்ளி அருகே ஆற்றங்கரையில் காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து விநாயகர், முருகன் கோயில் வழியாக முக்கிய தெருக்களில் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பின் சீலைக்காரி அம்மனுக்கு பாலபிஷேகம் நடந்தது.
பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 508 விளக்கு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்தனர்.