/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி- ரவுண்டானாவில் ஆபத்து
/
பரமக்குடி- ரவுண்டானாவில் ஆபத்து
ADDED : பிப் 21, 2025 06:53 AM

பரமக்குடி: பரமக்குடியில் இருந்து இளையான்குடி ரோடு ஓட்டப்பாலம் பகுதியில் சென்டர் மீடியன் பாதுகாப்பற்ற முறையில் உள்ளதால் விபத்து அச்சம் அதிகரித்துள்ளது.
பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து செல்லும் அனைத்து இளையான்குடி பஸ்களும் ஐந்து முனை ரோடு வழியாக செல்கிறது. தொடர்ந்து ஓட்டப்பாலம் அருகில் ஹேர்பின் பெண்ட் உள்ளது. மேலும் மதுரை, ராமநாதபுரம் ரோட்டில் இருந்து முதுகுளத்துார் மற்றும் இளையான்குடி பகுதிகளுக்கு செல்ல இந்த ரோடு பிரதானமாக இருக்கிறது. இதனால் ஹேர் பின் பெண்ட் வழியாக நான்கு வழி பாதையாக ரோடு பிரிகிறது.
இப்பகுதியில் தனியார், அரசு பள்ளிகள், ரிஜிஸ்டர் ஆபீஸ், தாலுகா அலுவலகம், நீதிமன்றம், போலீஸ் ஸ்டேஷன், வழிபாட்டுத்தலங்கள் உள்ளது. இதனால் டூவீலர், ஆட்டோ, கார் என அதிகளவில் செல்லும் நிலையில் பாதசாரிகளும் செல்கின்றனர்.
மேலும் கனரக வாகனங்கள், சென்னை, திருச்சி செல்லும் பஸ்கள் உட்பட அனைத்து அரசு பஸ்களும் இந்த வழியாக செல்கின்றன. தொடர்ந்து சென்டர் மீடியன் வளைவான பகுதி பாதுகாப்பற்ற முறையில் எவ்வித சிக்னல் விளக்குகளும் இன்றி இருக்கிறது.
எனவே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வளைவான பகுதியில் போதிய சிக்னல் மற்றும் சென்டர் மீடியனை சீரமைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.