தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி அலங்கார மாதா தேர் பவனி

பரமக்குடி அலங்கார மாதா தேர் பவனி

பரமக்குடி அலங்கார மாதா தேர் பவனி


ADDED : ஆக 30, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நவநாள் திருப்பலி நிறைவு

பரமக்குடி: பரமக்குடி அலங்கார மாதா சர்ச்சில் நவநாள் திருப்பலி விழாவையொட்டி அன்னை தேர் பவனி நடந்தது.

பரமக்குடி ஐந்து முனை அருகில் உள்ள அலங்கார மாதா சர்ச்சில் கொடி ஏற்றத்துடன் விழா துவங்கியது. இங்கு தினமும் மாலை சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு சர்ச் வளாகத்தில் அன்னை வலம் வந்தார். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு கூத்தலுார் பங்கு பணியாளர் திரவியம் தலைமையில் திருப்பலி நடந்தது. பின்னர் அலங்கார மாதா மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து பவனி வந்தார்.

பங்கு பணியாளர்கள் பரமக்குடி இருதயராஜ், உலகநாதபுரம் சுவைக்கின் ஞானதாசன், திருவரங்கம் சேசு சகாய ஜோசப், மகிண்டி ஜேம்ஸ், ஆரோக்கியசாமி, உதவி பங்கு பணியாளர்கள் மரிய அந்தோணி, ஜேம்ஸ் பங்கேற்றனர்.பிரார்த்தனையில் இறை மக்கள், பங்கு மக்கள், பேரவையினர், அமலவை அருள் சகோதரிகள், அன்பியங்கள் கலந்து கொண்டனர்.

சர்ச் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. தொடர்ந்து கொடி இறக்கத்துடன் நவநாள் திருப்பலி நிறைவடைந்தது.

––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us