தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பரமக்குடி எமனேஸ்வரம் தரைப்பாலத்தில் ஆபத்து

பரமக்குடி எமனேஸ்வரம் தரைப்பாலத்தில் ஆபத்து

பரமக்குடி எமனேஸ்வரம் தரைப்பாலத்தில் ஆபத்து


ADDED : மார் 14, 2024 03:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2024 03:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாய்ந்த ஆர்ச் வளைவால் அச்சம்

பரமக்குடி: -பரமக்குடி, எமனேஸ்வரம் வைகை ஆறு தரைப்பாலம் பகுதியில் சாய்ந்த ஆர்ச் இரும்பு கம்பத்தால் விபத்து அச்சம் அதிகரித்துள்ளது.

மதுரை, ராமநாதபுரம் ரோடு சந்தை கடை எதிரில் எஸ்.எஸ். கோயில் தெரு வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் தரைப்பாலத்தை கடந்து எமனேஸ்வரம், நயினார்கோவில் ரோட்டை அடைகிறது.

இப்பகுதியில் 20 ஆண்டு களுக்கு முன்பு பாலம் கட்டப்பட்ட நிலையில் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இரு புறங்களிலும் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில் தினமும் எமனேஸ்வரம் பகுதியில் உள்ள 10 வார்டுகளை சேர்ந்த மக்கள் இந்த பாலத்தை பயன்படுத்துகின்றனர்.

மேலும் பாலத்தில் விபத்தை தவிர்க்கும் வகையில் கனரக வாகனங்கள் செல்ல முடியாதபடி இருபுறங்களிலும் தடுப்பு இரும்பு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பரமக்குடி பகுதியில் உள்ள கம்பம் கடந்த வாரம் வாகனம் மோதி லேசாக சாய்ந்த நிலையில் இருந்தது.

தற்போது ஒட்டுமொத்தமாக விழுந்து விபத்து ஏற்படுத்தும் ஆபத்தான நிலையில் உள்ளது.

ஆகவே இரும்பு ஆர்ச் கம்பத்தை சீரமைக்க பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us