/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிறந்த நெசவாளர் விருதுகள் பெற்ற பரமக்குடி எமனேஸ்வரம் கைத்தறி நெசவாளர் சங்கங்கள்
/
சிறந்த நெசவாளர் விருதுகள் பெற்ற பரமக்குடி எமனேஸ்வரம் கைத்தறி நெசவாளர் சங்கங்கள்
சிறந்த நெசவாளர் விருதுகள் பெற்ற பரமக்குடி எமனேஸ்வரம் கைத்தறி நெசவாளர் சங்கங்கள்
சிறந்த நெசவாளர் விருதுகள் பெற்ற பரமக்குடி எமனேஸ்வரம் கைத்தறி நெசவாளர் சங்கங்கள்
ADDED : அக் 01, 2025 08:57 AM

ரா மநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் எமனேஸ்வரம் பகுதியில் நெசவுத் தொழிலை மேற்கொள்ள உகந்த பருவநிலையால் கி.பி.16ம் நுாற்றாண்டு முதல் நெசவாளர்கள் நெசவுத் தொழிலில் சிறந்து விளங்குகின்றனர்.
துவக்கத்தில் சாதா தறிகள் மூலம் பிளேன் பருத்திரகம் உற்பத்தி செய்த நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஜக்கார்டு பெட்டி, கம்ப்யூட்டரில் வடிவமைக்கப்பட்டு சேலைகள் உருவாகின்றன.
தற்போது ராமாயண, மகாபாரத காட்சிகள், கோயில் கோபுர வடிவமைப்புகள் என நெய்யப்பட்டு வருகிறது. பண்டைய மகளிர் உடுத்திய ஆர்கானிக் சேலைகள் புத்துயிர் பெற்று வருகிறது.
இங்கு 81 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 11,500 நெசவாளர்கள் உறுப்பினர்களாகவும், 7500 தறிகளும் இயங்கி வருகிறது.
பருத்தி, செயற்கை பட்டு சேலைகள் நுகர்வோருக்கு 20 சதவீதம் தள்ளுபடி மானியத்திலும் மற்றும் அண்ணாதுரை பிறந்த நாளில் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தில் 2141 நெசவாளர்கள் பயனடைந்துள்ளனர். 60 வயது பூர்த்தி அடைந்த 913 நெசவாளர்கள் மாதம் 1200 ஓய்வூதியம் பெறுகின்றனர்.
60 வயதுக்கு முன் மரணமடைந்த நெசவாளர்களின் 34 குடும்பத்திற்கு மாதம் 1200 ரூபாய் வழங்கப்படுகிறது. பிரதமரின் விபத்து காப்பீடு திட்டத்தில் இயற்கை மற்றும் விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம் முதல் 4 லட்சம் வரை நியமனதாரருக்கு ஆயுள் காப்பீடு தொகை வழங்கப்படுகிறது. பிரதமரின் குறுந்தொழில் உதவி புரியும் முத்ரா கடன் திட்டத்தில் ஒவ்வொரு நெசவாளருக்கும் ரூ. 50 ஆயிரம் கடன் உதவி, ரூ.10 ஆயிரம் மானியத்துடன் வழங்கப்படுகிறது. கைத்தறிக்கு 300 யூனிட் இலவச மின்சார திட்டத்தில் 3269 பேர் பயன் பெறுகின்றனர். வாரணாசியில் உள்ள வடிவமைப்பு மையத்திற்கு இணையாக பரமக்குடி சரகத்தில் ரூ.18 லட்சம் மதிப்பில் ஜீவா நகரில் மத்திய, மாநில அரசு நிதி உதவியோடு தற்கால சூழ்நிலைக்கேற்ப ஆடை வடிவமைப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
ரூ. 4 லட்சம் மானியத்துடன் வீடு கட்டும் திட்டத்தில் 39 பேர் பயன் பெற்றுள்ளனர். ஜீவா நகரில் ரூ. 64 லட்சம் மதிப்பில் கைத்தறி பூங்கா பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. தொடர்ந்து சிறந்த நெசவாளருக்கான விருதுகளை ஆண்டுதோறும் பரமக்குடி நெசவாளர்கள் பெற்று வருகின்றனர். இவ்வாறு கைத்தறி உதவி இயக்குனர் சேரன் தெரிவித்தார்.