/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்: 610 பேருக்கு பணி ஆணை
/
பரமக்குடி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்: 610 பேருக்கு பணி ஆணை
பரமக்குடி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்: 610 பேருக்கு பணி ஆணை
பரமக்குடி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்: 610 பேருக்கு பணி ஆணை
ADDED : டிச 21, 2025 06:51 AM

பரமக்குடி: பரமக்குடி அரசு கலை கல்லுாரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர் புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 610 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் முன்னிலை வகித்தார்.
முகாமில் 107 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. 2448 பேர் பங்கேற்று கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்புக்கு கம்பெனிகளை தொடர்பு கொண்டனர்.
இதில் 610 பேர் உடனடியாக தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. திட்ட இயக்குனர் பாபு, நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார், கல்லூரி முதல்வர் ராஜா உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.