/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பூட்டியுள்ள இ--சேவை மையம் அலைக்கழிக்கப்படும் பரமக்குடி மக்கள்
/
பூட்டியுள்ள இ--சேவை மையம் அலைக்கழிக்கப்படும் பரமக்குடி மக்கள்
பூட்டியுள்ள இ--சேவை மையம் அலைக்கழிக்கப்படும் பரமக்குடி மக்கள்
பூட்டியுள்ள இ--சேவை மையம் அலைக்கழிக்கப்படும் பரமக்குடி மக்கள்
ADDED : ஜூலை 17, 2025 11:10 PM

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி வளாகத்தில் அரசு இ--சேவை மையம் பெரும்பாலான நாட்கள் பூட்டியே இருப்பதால் மக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களுக்கான சேவைகளை ஆன்லைன் வாயிலாக பெற இ--சேவை மையங்கள் செயல்படுகிறது. தமிழக மின்னாளுமை முகமை, தமிழக கேபிள் டிவி நிறுவனம் ஆகியவை மையங்களை நடத்துகிறது.
இங்கு பிறப்பு, இறப்பு சான்று, வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வருவாய்த்துறை சம்பந்தமான வருமானம், இருப்பிட சான்றிதழ்கள், முதல் பட்டதாரி சான்றிதழ் என அனைத்திற்கும் விண்ணப்பிக்க முடியும்.
தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு அரசு துறைகள் தொடர்பான சேவைகளும் வழங்கப்படுகிறது.
பரமக்குடி நகராட்சியில் சில மாதங்களாக இ--சேவை மையம் பூட்டியே உள்ளது.
இதனால் பயனாளிகள் ஒவ்வொரு முறையும் அலையும் சூழல் அதிகரித்துள்ளது.
எனவே நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள இ--சேவை மையத்தை நிரந்தரமாக திறந்து வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.