/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதல்வர் கோப்பை வென்ற பரமக்குடி பள்ளி மாணவிகள் பளு துாக்குதலில் சாதனை

ADDED : அக் 05, 2025 04:16 AM

பரமக்குடி, : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பள்ளிகளை சேர்ந்த இரண்டு மாணவிகள் முதல்வர் கோப்பை 2025 பளு துாக்குதலில் வெற்றி பெற்று பரிசு வென்றனர்.
அக்.3 மற்றும் 4ல் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் 2025ம் ஆண்டு முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான பளு துாக்கும் போட்டிகள் நடந்தது. இதில் பெண் களுக்கான பள்ளிகள் பிரிவில் பரமக்குடியில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 9 மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் மாணவி பி.ஆர்.கீர்த்திகா 48 கிலோ பிரிவில் ஸ்னாட்ஸ் முறையில் 41 கிலோவும், கிளீன் அண்டு ஜெர்க் முறையில் 53 கிலோ என ஒட்டுமொத்தமாக 94 கிலோ எடை துாக்கினார். இப்பிரிவில் மாணவி தங்கப்பதக்கம் வென்று ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு பெற்றார்.
இதே போல் 44 கிலோ எடை பிரிவில் என்.எஸ்.வைஷ்ணவி ஸ்னாட்ஸ் முறையில் 48 கிலோ, கிளீன் அண்டு ஜெர்க் முறையில் 62 கிலோ என 110 கிலோ எடை துாக்கினார். இவர் வெள்ளி பதக்கம் பெற்று ரூ. 75 ஆயிரம் ரப்பு பரிசு வென்றார்.
பரமக்குடி எமனேஸ்வரம் பிரண்ட்ஸ் ஜிம் பயிற்சி சாலை ஆசிரி யர்கள், பெற்றோர்கள் வாழ்த்தினர்.