/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி வைகை ஆறு உ.பா., பிரியர்களின் பாராக மாறுகிறது; போலீசார் ரோந்து என்ன ஆச்சு...
/
பரமக்குடி வைகை ஆறு உ.பா., பிரியர்களின் பாராக மாறுகிறது; போலீசார் ரோந்து என்ன ஆச்சு...
பரமக்குடி வைகை ஆறு உ.பா., பிரியர்களின் பாராக மாறுகிறது; போலீசார் ரோந்து என்ன ஆச்சு...
பரமக்குடி வைகை ஆறு உ.பா., பிரியர்களின் பாராக மாறுகிறது; போலீசார் ரோந்து என்ன ஆச்சு...
ADDED : அக் 02, 2025 04:22 AM

பரமக்குடி : பரமக்குடி வைகை ஆறு முழுவதும் உ.பா., பிரியர்கள் பாராக மாறி வரும் நிலையில் கண்ணுக்கெட்டும் துாரம் வரை பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் உடைந்த கண்ணாடி துண்டுகள் சிதறி ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது.
அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் சூழலில் ஆங்காங்கே பார் வசதி உள்ளது. இந்நிலையில் காற்று வாக்கில் வயல்வெளிகள், நீர் நிலைகள் என வெட்ட வெளிகளில் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதன்படி வைகை ஆறு மணல் பரப்புகளை பாராக மாற்றியுள்ளனர். தொடர்ந்து பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில் வைகை ஆறு படித்துறைகள் உட்பட ஆற்றுப்பாலம், தரைப்பாலம் என அனைத்து இடங்களிலும் இரவு நேரங்களில் அதிகளவில் கூடுகின்றனர்.
அப்போது அவர்கள் விட்டுச் செல்லும் தண்ணீர் மற்றும் கூல்டிரிங்க்ஸ் பாட்டில்கள், உணவு பொருட்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் கேரி பைகள் என சிதறி கிடக்கின்றன. இதே போல் மது பாட்டில்களை உடைத்து செல்வதால் கண்ணாடி துண்டுகள் அங்கு விளையாடச் செல்லும் குழந்தைகள் மற்றும் காற்று வாங்க செல்லும் முதியோரை பதம் பார்க்கிறது.
மேலும் சித்திரை திருவிழா வைகை ஆற்றில் நடக்கும் சூழலில் காட்டுப்பரமக்குடி துவங்கி காக்காதோப்பு வரை விழா நாட்களில் மக்கள் கூடுகின்றனர். இதே போல் பங்குனி மற்றும் வைகாசி திருவிழா உட்பட ஆண்டு முழுவதும் பால்குடம் எடுக்கும் நிகழ்வுகள் ஆற்றில் நடக்கிறது.
இத்துடன் ஆற்றில் தண்ணீர் வரும் நேரங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் நீர்நிலைகளில் தேங்கி விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. ஆகவே ஒட்டுமொத்த வைகை ஆறு உட்பட கரையோரங்களில் உ.பா., பிரியர்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.