தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மனு கொடுக்கும் போராட்டம்

மனு கொடுக்கும் போராட்டம்

மனு கொடுக்கும் போராட்டம்


ADDED : அக் 02, 2025 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2025 04:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் இணைந்து கலெக்டரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மயில்வாகனன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கலையரசன் முன்னிலை வகித்தார். மயில்வாகனன் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் குடிமனை பட்டா இல்லாமல் புறம்போக்கு இடங்களில் வசிக்கும் 40 லட்சம் பேர் உள்ளனர்.

அவர்களுக்கு பட்டா வழங்க சிறப்பு திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

நீர்நிலை பகுதியில் வசிப்போருக்கு மாற்று இடத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசின் கான்கிரீட் வீடுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். தொழிற்சாலைகளுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us