/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பணிநிரந்தரம் செய்ய பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை
/
பணிநிரந்தரம் செய்ய பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை
ADDED : ஜன 01, 2024 05:26 AM
பரமக்குடி: தகுதி உள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்கு அரசு பணிநிரந்தரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
பரமக்குடியில் பகுதி நேர ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. தலைவர் திருப்பதி தலைமை வகித்தார்.
அப்போது தகுதி இல்லாத பகுதி நேர ஆசிரியர்களை தவிர்த்து விட்டு, உரிய கல்வி தகுதி உள்ள ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தனர்.
அவர்கள் கூறியதாவது: கடந்த 2012 அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், கணினி, இசை, கட்டடக்கலை, வாழ்க்கை கல்வி போன்ற பணியிடத்தில் அமர்த்தப்பட்டனர்.
இதில் பாதிபேர் வரை கல்வித் தகுதி இல்லாமல் உள்ளனர். இவர்களுக்கு 12 ஆண்டு காலமாக ஊதியம் அளித்து வரும் நிலையில், கல்வி தகுதி உள்ள ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
தொடர்ந்து பணியமர்த்தப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களின் சான்றிதழ் மறுசரிபார்ப்பு 30 ஜூலை 2023ல் குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் நடந்தது.
தொடர்ந்து வாழ்வாதாரம் கருதி, வயது முதிர்வை கருத்தில் கொண்டு தகுதி உள்ள ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்றனர்.