/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் இருந்து தினசரி கோவைக்கு ரயில் இயக்க வேண்டும் பயணிகள் எதிர்பார்ப்பு

ADDED : செப் 21, 2024 05:13 AM
ராமநாதபுரம்:' ராமேஸ்வரத்தில் இருந்து கோவைக்கு தினசரி இயக்கப்பட்ட பாசஞ்சர் ரயிலை மீண்டும்இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆன்மிக தலங்களான ராமேஸ்வரம், தேவிபட்டினம், உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, ஏர்வாடி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்கள் உள்ளன.
இங்கிருந்து வட மாநில பயணிகள் பழநி செல்வதற்கு வசதியாகவும்,கேரள மாநிலத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கோவை, பெள்ளாச்சி வழியாக வருபவர்களுக்கும் இந்த ரயில் உதவியாக இருந்தது.
அகலப்பாதையாக மாற்றம் செய்த போது 2008ல் ராமேஸ்வரம்- கோவை ரயில் நிறுத்தப்பட்டது. தற்போது வாரத்தில் புதன் கிழமை மட்டும் ராமநாதபுரத்திலிருந்து கோவைக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க முன் வர வேண்டும்.
ராமேஸ்வரம் பிராந்திய ரயில் சேவைக்குழு செயலாளர் சகாய வினோத் கூறியதாவது :
ராமேஸ்வரத்திலிருந்து தினசரி கோவைக்கு இயக்கப்பட்ட ரயிலை மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் முன் வரவேண்டும். அதில் சிக்கல்கள் இருப்பின் ஈரோட்டில் இருந்து திருப்பூர் வழியாக கோவை, பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்க வேண்டும். இதற்கான முயற்சியை மதுரை ரயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டும் என்றார்.