பஸ்ஸ்டாண்டில் ஆக்கிரமிக்கும் மாடுகளால் பயணிகள் அவதி
பஸ்ஸ்டாண்டில் ஆக்கிரமிக்கும் மாடுகளால் பயணிகள் அவதி
ADDED : செப் 26, 2026 03:41 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை பஸ்ஸ்டாண்டில் தினமும் மாடுகள் கூட்டமாக திரிவதால் பயணிகள் சிரமப்படுகின்றனர். திருவாடானை பஸ்ஸ்டாண்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பஸ்ஸ்டாண்டில் சில நாட்களாக ஏராளமான மாடுகள் கூட்டமாக திரிகின்றன. பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயிலை மாடுகள் ஆக்கிரமித்துள்ளதால் டிரைவர்கள் சிரமப்படுகின்றனர். மாடுகள் சண்டையிடும் போது பயணிகள் அலறி அடித்து ஓடுகின்றனர்.
இது குறித்து பயணிகள் கூறுகையில், பஸ்ஸ்டாண்டிற்குள் நடந்து செல்ல முடியவில்லை. முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் வரும் போது மாடுகள் முட்டி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. உரிமையாளர்கள் மாடுகளை தங்களது சொந்தக் கட்டுபாட்டில் வளர்க்க வேண்டும் என்றனர்.
