பரமக்குடியில் பஸ்கள் இன்றி காத்திருந்த பயணிகள் அவதி
பரமக்குடியில் பஸ்கள் இன்றி காத்திருந்த பயணிகள் அவதி
UPDATED : நவ 07, 2026 05:47 PM
ADDED : நவ 07, 2026 05:44 PM
பரமக்குடி: பரமக்குடி பஸ்ஸ்டாண்டில் மதுரை, ராமேஸ்வரம் செல்ல போதிய பஸ்கள் இன்றி பயணிகள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகைக்காக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் பஸ்கள் பெரும்பாலும் பரமக்குடி வராமல் சென்றன. இதனால் பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் மற்றும் மதுரை செல்ல வேண்டிய பயணிகள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இது போன்ற விழாக் காலங்களில் கூடுதல் பஸ்களை இயக்கும் வேலையில் வழக்கமான பஸ்களையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் வழக்கமான பஸ்களே இல்லாத சூழலில் பரமக்குடி நகராட்சி போன்ற லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் ஊர்களில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
