ADDED : நவ 07, 2026 05:26 PM
அ நிறம் | அளவு
தேவிபட்டினம்: கிழக்கு கடற்கரை பகுதிகளில் நேற்று (நவ.,6) இரவில் கனமழை பெய்தது. இதனால், தேவிபட்டினம், கோப்பேரி மடம், திருப்பாலைக்குடி, சம்பை, நதிப்பாலம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள உப்பளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. உப்பளங்களில் மழை நீர் தேங்கியதை தொடர்ந்து உப்பு உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.
உப்பளங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள உப்புகளும் மழையில் வீணாகியது. பெரும்பாலான உப்பளங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவித்து வைக்கப்பட்டுள்ள உப்பு குவியலை பிளாஸ்டிக் தார்ப்பாய் மூலம் தொழிலாளர்கள் மூடி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
