/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ் ஸ்டாண்டில் நீண்ட நேரம் காத்திருந்து பயணிகள் அவதி! தீபாவளி சிறப்பு பஸ்கள் பெயரளவில் இயக்கம்
/
பஸ் ஸ்டாண்டில் நீண்ட நேரம் காத்திருந்து பயணிகள் அவதி! தீபாவளி சிறப்பு பஸ்கள் பெயரளவில் இயக்கம்
பஸ் ஸ்டாண்டில் நீண்ட நேரம் காத்திருந்து பயணிகள் அவதி! தீபாவளி சிறப்பு பஸ்கள் பெயரளவில் இயக்கம்
பஸ் ஸ்டாண்டில் நீண்ட நேரம் காத்திருந்து பயணிகள் அவதி! தீபாவளி சிறப்பு பஸ்கள் பெயரளவில் இயக்கம்
ADDED : அக் 19, 2025 09:26 PM

ராமநாதபுரம்: தீபாவளியை முன்னிட்டு ராமநாதபுரத்தில் இருந்து போதிய அளவில் பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கிராமப்புறங்களில் இருந்து ராமநாதபுரத்திற்கு துணி எடுக்க வருவதற்கும் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பஸ்களில் போட்டி போட்டு ஏறினர்.
தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக அக்.16 முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களில் மட்டும் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து ஏராளமானவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் மாவட்ட அளவில் போதிய அளவில் பஸ் வசதி இல்லாததால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி, கமுதி, காரைக்குடி, சாயல்குடி, தொண்டி, திருச்சி, துாத்துக்குடி, திருச்செந்துார், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 20 முதல் 40 நிமிடங்களுக்கு ஒரு பஸ் என்ற விகிதத்தில் இயக்கப்படுகிறது. தீபாவளி முன்னிட்டு நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமநாதபுரத்திற்கு மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். அதுமட்டுமின்றி வெளியூர்களில் வேலைக்காக சென்றவர்களும் பஸ், ரயில் மூலம் ராமநாதபுரத்திற்கு வந்தனர்.
இந்நிலையில் போதிய அளவில் பஸ் வசதி இல்லாததால் பஸ் ஸ்டாண்டில் நீண்ட நேரம் காத்திருந்தனர். ராமநாதபுரம் மட்டுமின்றி பரமக்குடி, சாயல்குடி, தொண்டி, ராமேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பஸ் ஸ்டாண்டில் மக்கள் பஸ்சுக்காக நீண்டநேரம் காத்திருந்தனர்.
இது குறித்து பயணிகள் கூறியதாவது: ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கிறோம். டவுன் பஸ் மட்டுமின்றி மதுரை, துாத்துக்குடி, திருச்செந்துார் , வேளாங்கண்ணி, காரைக்குடி செல்லும் வெளிமாவட்ட பஸ்கள் கூட வரவில்லை. அப்படியே பஸ் வந்தாலும் பலர் போட்டி போட்டு ஏறுவதால் முதியோர், குழந்தைகளுடன் வந்திருப்போர் ஏற முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவதாக தெரிவித்தனர்.
ஆனால் வழக்கமாக வரும் பஸ்கள் கூட தற்போது வரவில்லை. பஸ் ஸ்டாண்ட் கண்காணிப்பாளரிடம் கேட்டால் சரியான பதில் அளிக்கவில்லை. இதுபோன்ற பண்டிகை காலங்களில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பஸ்கள் இயக்க வேண்டும் என்றனர்.
----