/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா கோலாகலம்
/
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா கோலாகலம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா கோலாகலம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா கோலாகலம்
ADDED : அக் 31, 2025 12:22 AM

கமுதி:  ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் 118வது ஜெயந்தி, 63வது குருபூஜை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் தேவர் சிலைக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். அரசு விழாவாக கொண்டாடப்படுவதால் காலை 10.15 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மூர்த்தி, ராமச்சந்திரன், பெரியகருப்பன், கீதாஜீவன், எம்.பி.,கனிமொழி உட்பட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
ராமநாதபுரம்,சிவகங்கை ,மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பால்குடம் எடுத்தும், வேல் குத்தியும், ஜோதி எடுத்து வந்தும் மரியாதை செலுத்தினர். ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து மரியாதை செய்தனர். தென் மண்டல ஐ.ஜி., பிரேம்ஆனந்த் சின்ஹா தலைமையில் டி.ஐ.ஜி., மூர்த்தி, எஸ்.பி., சந்தீஷ் முன்னிலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பசும்பொன் கிராமத்தில் அவ்வப்போது ட்ரோன் கேமராக்கள் பறக்கவிட்டு ஆய்வு செய்தனர். மதுரை ஆதினம், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், எம்.பி.,தர்மர், அ.தி.மு.க.,பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், விஸ்வநாதன், உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர்.
அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன், ம.தி.மு.க.,பொதுச் செயலாளர் வைகோ,  தே.மு.தி.க., சார்பில் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், பா.ம.க.,சார்பில் தலைவர் மணி, நா.த., கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், த.வெ.க., பொதுச்செயலாளர் ஆனந்த்.
* முதுகுளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., மலேசியா பாண்டியன், ம.தி.மு.க., சார்பில் பொதுக்குழு உறுப்பினர் நித்தியானந்தம், பொறியாளர் அணி மாநில துணைச் செயலாளர்  இளங்கோ நித்தியானந்தம், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் வடமலையான், அ.தி.மு.க.,ஒன்றிய செயலாளர்கள் காளிமுத்து (கமுதி தெற்கு),செந்தில்குமார் (முதுகுளத்துார் மத்தி),ராஜேந்திரன் (கமுதி வடக்கு), கருமலையான் (கமுதி மேற்கு), முனியசாமி (கமுதி கிழக்கு), ரெத்தினமூர்த்தி (திருவாடானை தெற்கு) அவைத் தலைவர்கள் சேகரன் (கமுதி மேற்கு), ராமச்சந்திரன் (கமுதி வடக்கு), தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒன்றிய செயலாளர் நிர்மல்குமார், மேற்கு ஒன்றிய ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் செந்துாரான்,மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் கோவிந்தன், வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரமேஷ், மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் கோவிந்தன், வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதி கருப்புசாமி, பரமக்குடி நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, துணைத் தலைவர் குணா, பா.ஜ., மாவட்ட விவசாய அணி துணை தலைவர் சத்தியமூர்த்தி, அ.ம.மு.க., சிவகங்கை மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, மாவட்ட மாணவியர் அணி செயலாளர் வழக்கறிஞர் தனம் அபிநயா பாண்டிகுமார் உட்பட பலர் மரியாதை செலுத்தினர்.

