/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பசும்பொன் தேவர் குருபூஜை ஆன்மிக விழாவுடன் துவக்கம்
/
பசும்பொன் தேவர் குருபூஜை ஆன்மிக விழாவுடன் துவக்கம்
பசும்பொன் தேவர் குருபூஜை ஆன்மிக விழாவுடன் துவக்கம்
பசும்பொன் தேவர் குருபூஜை ஆன்மிக விழாவுடன் துவக்கம்
ADDED : அக் 29, 2024 04:47 AM

கமுதி: கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 117 வது ஜெயந்தி விழா, 62 வது குருபூஜை விழா நேற்று காலை 6:00 மணிக்கு ஆன்மிக விழாவுடன் துவங்கியது.
நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் தலைமை வகித்தார். பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் குழுவினர் முன்னிலையில் யாகசால பூஜையுடன் துவங்கியது. கணபதி ஹோமம், பூர்ணாஹுதி லட்சார்ச்சனை, சிறப்பு யாகசால பூஜை நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க கடம் புறம்பாட்டுக்கு பின் புனித கும்பநீர் எடுத்துச் செல்லப்பட்டு முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
பின் பால், சந்தனம், மஞ்சள் உட்பட 21 வகை அபிஷேகம், பூஜை நடந்தது. ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பால்குடம், பொங்கல் வைத்தும், மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
மாலையில் வளாகத்தில் விளக்கு பூஜை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் முக்கிய வீதிகளில் தேவர் சிலையை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
பசும்பொன் கிராமத்தில் 2000 போலீசாரும், ஆளில்லா விமானம்,19 ட்ரோன் கேமராக்கள், 90 இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.