/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகள் சிரமம்: செயல்படாத லிப்டுகளால் தவிக்கும் பரிதாபம்
/
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகள் சிரமம்: செயல்படாத லிப்டுகளால் தவிக்கும் பரிதாபம்
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகள் சிரமம்: செயல்படாத லிப்டுகளால் தவிக்கும் பரிதாபம்
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகள் சிரமம்: செயல்படாத லிப்டுகளால் தவிக்கும் பரிதாபம்
ADDED : ஜன 19, 2025 05:00 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் செயல்படாத லிப்டுகளால் நோயாளிகள், அவரது உறவினர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ரூ.154.48 கோடியில் ஐந்து தளங்களை கொண்ட புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இதில் 500 படுக்கைகள் கொண்ட வார்டுகள், 10 அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளிட்ட தீவிர சிகிச்சை பிரிவு, அதி தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
இங்கு சிகிச்சை பெறும் உள் நோயாளிகளை பார்ப்பதற்காக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு ஐந்து தளங்களுக்கும் நோயாளிகள், உறவினர்கள் செல்வதற்காக 6 லிப்டுகள் உள்ளன. இதில் டாக்டர்கள், பணியாளர்கள் செல்வதற்காக ஒரு லிப்டும், நோயாளிகளை அழைத்து செல்ல ஒரு லிப்டும், மற்ற நான்கு லிப்டுகள் நோயாளிகளுடன் தங்கியுள்ள உதவியாளர்கள், பார்வையாளர்கள் பயன்படுத்துவதற்காக உள்ளன.
இதில் நான்கு லிப்டுகள் செயல்படுவதில்லை. டாக்டர்கள் பணியாளர்கள் செல்வதிலும், நோயாளிகள் அழைத்து செல்லும் லிப்டுகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஐந்து தளங்களுக்கும் பொதுமக்கள் மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதற்குள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
சறுக்கு பாதை இருந்தாலும் இதில் இரண்டாவது தளத்தில் அறுவை சிகிச்சை அரங்கு இருப்பதால் இரும்பு கிரில் கேட் போட்டு பூட்டி விடுகின்றனர். இதன் காரணமாக வேறு வழியே இல்லாமல் மாடிப்படிகளில் ஏறி இறங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். முதியவர்கள் மாடிப்படிகளில் ஏற முடியாமல் தவிக்கின்றனர்.
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் அனைத்து லிப்டுகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டடம் திறந்து ஒன்றரை ஆண்டுகளுக்குள் இப்படி லிப்டுகள் பழுதடைந்தால் தரமற்ற லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா, அப்படி இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ------------