/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இரவில் சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லாத அவலம் நோயாளிகள் பாதிப்பு
/
இரவில் சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லாத அவலம் நோயாளிகள் பாதிப்பு
இரவில் சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லாத அவலம் நோயாளிகள் பாதிப்பு
இரவில் சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லாத அவலம் நோயாளிகள் பாதிப்பு
ADDED : டிச 06, 2024 05:19 AM
தொண்டி: திருவாடானை அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லாததால் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டவரை டூவீலரில் ராமநாதபுரம் அழைத்துச் சென்றனர்.
திருவாடானையில் அரசு மருத்துவமனை, தொண்டியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
இங்கு இரவு நேரத்தில் டாக்டர் இல்லாததால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொண்டி அருகே நம்புதாளை இப்ராம்ஷா கூறியதாவது:
நேற்று முன்தினம் அதிகாலை 12:00 மணிக்கு எனது உறவினருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றோம். அங்கு இருந்த நர்சுகள் திருவாடானைக்கு கொண்டு செல்லுங்கள் என்றனர்.
திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.
அங்கிருந்த நர்சுகள் உடனடியாக ராமநாதபுரத்திற்கு கொண்டு செல்லுங்கள் என்றனர். திரும்பி தொண்டிக்கு சென்று ஆம்புலன்ஸ் 108க்கு போன் செய்தோம். யாரும் தொடர்பு கொள்ளவில்லை.
வலி அதிகமானதால் டூவீலரில் 60 கி.மீ., ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தோம். இரவில் டாக்டர்கள் இல்லாததால் பெரும் பாதிப்பாக உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு இதே போல் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட ஒருவரை டாக்டர் இல்லாததால் டூவீலரில் ராமநாதபுரத்திற்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
மக்களின் நலன் கருதி திருவாடானை, தொண்டியில் இரவு டாக்டர்கள் பணியாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.